Saturday, November 05, 2005

ரீ-என்ட்ரி

நல்ல வேள இந்த கிருக்குபயல இத்தன நாளா காணோம்-னு குஷியாகியிருந்த அனைத்து நலம்விரும்பிகளுக்கும் ஒரு சலாம்.

ஏண்டா இத்தன நாளா எழுதலனு கேக்காதீங்க. ஏன்னா, அது எனக்கே தெரியல. ஊருக்கு திரும்பின சந்தோஷத்துல எதயும் கவணிக்கமுடியாம போயிடுச்சு. மத்தபடி என் ரசிகர்களே (இதப்பார்ரா..!), உங்கள பட்டினி போட்டதுக்கு மன்னிச்சுடுங்க.

மொததடவயே ஆர்வம் தாங்க முடியல இப்போ ரீ-என்ட்ரி வேறயா? என்னத்த புதுசா எழுதிடப்போற?-னு கேட்டீங்கன்னா, அதுக்கு ஒரு ஐடியா
வெச்சிருக்கேன். அதில்லாம இங்க ரொம்ப நாள் நிக்கமுடியாதில்ல!

இந்த முறை, படிக்கிற படிப்போட ஒட்டி எதாவது பயனுள்ளதா எழுதலாமேன்னு ஒரு ஞானஒளி திடீர்னு. அதான் இங்க ஓடிவந்தேன். தங்களுடைய மேலான வாக்குகளை எனக்கே அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டு என் செகன்ட்-இன்னிங்ஸை ஆரம்'பிக்கிறேன்' ஒரு புத்தம்புது வலைப்பதிவுல...வந்துதான் பாருங்களேன், ப்ளீஸ்!!

LINK

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, April 01, 2005

மாயா உண்மையா?


ஜீபூம்பா கையில் செய்தித்தாளை வைத்துக்கொண்டு அதில் இருக்கும் திரைப்படங்களின் விளம்பரங்களை பார்த்துக்கொண்டிருப்பார். அதில், சிவாஜியும், எம்ஜிஆரும் ஆடிப்பாடும் விடியோ காட்சிகளே தெரியும். ஆச்சரியத்தில் குதிப்பார்கள் நாகேஷும் CID சங்கரும். இதெப்படி ஒரு பேப்பரில் விடியோ காட்சிகளே ஓடுதே! சாதாரண புகைப்படங்களை மட்டும் பார்த்துவந்தவர்களுக்கு அது அதிசயம். எல்லாம் இந்த ஜீபும்பாவோட குசும்பு. எல்லாம் மாயா!

ஹாரி பாட்டரும், ரோனும் சேர்ந்து ரோனின் தந்தையின் காரை எடுத்துக்கொண்டு ஹாக்வார்ட்ஸ்-க்கு பறந்துவருவார்கள். அந்த காட்சி அப்படியே பத்திரிக்கையில் ஓடிக்கொண்டிருக்க, அதை காட்டி அவர்களை பள்ளியிலிருந்து நீக்கப்போவதாகமிரட்டுவார் புரொபெஸ்ஸர்.

சே! இந்த சினிமாவுலதான் எத்தனை மாயாஜாலங்களை காட்டுறாங்க. இதை பார்த்து பிரமிக்கத்தானே திரை அரங்குகளுக்கு ஓடுறோம். ஒருவிததில், அறிவியலுக்கு சினிமா ஒரு சோர்ஸ். நமது ஆசைகளை திரைப்படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளாக வெளிவரும்போது, அதை
வைத்துக்கொண்டு, அந்த விஷயங்களை உருவாக்கும் பாதையில் அறிவியல் போகிறது. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான கற்பனைதான் இந்த பத்திரிக்கைகளில் விடியோ படங்கள்.

இது கூடிய சீக்கிரம் நிஜத்துக்கு வரப்போகிறது OLED (Organic Light Emitting Diodes) திரை தொழில்நுட்பத்தின் உதவியுடன். பெயருக்கேற்றார்போல், இந்த திரைகள் தங்களுக்குள்ளேயே ஒளியை அடக்கி உமிழ்ப்பதினால், தனியாக Back-Light தேவையில்லை. சிறப்பம்சம் என்னவென்றால், இந்த திரைகளை வளைக்க முடியும்! மிக மெல்லிய அடுக்கினைக் கொண்டுள்ளதால் பலவிதமான சட்டங்களின் மேல் இவைகளை ஏற்றமுடியும். மொத்ததில், எளிமையாக இந்த திரைகளை வளைந்துகொடுக்க வைக்க முடியும்.

ஆனால், இந்த திரைகள் சிறிய பரிமாணங்களில் தான் உருவாக்க முடியும். தற்போதுள்ள நிலையில் மொபைல் தொலைபேசிகளிலும், கைஅடக்க சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் கூடிய விரைவில், கையில் சுருட்டிக்கொண்டு போகும் வகையில், பத்திரிக்கைகளிலும், செய்தித்தாள்களிலும் ஏற்றமுடியும்.

எண்ணிப்பாருங்கள்! தினத்தந்தியில் தமிழக சட்டசபையைப் பற்றிய செய்தியும், பக்கத்தில் லைவ் விடியோ காட்சியும்!

நன்றி: Click Online (BBC World)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.